மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்.. பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்கும் மக்கள்..!

By vinoth kumar  |  First Published Apr 15, 2022, 8:08 AM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து விழா பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.


சித்திரை திருவிழா இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேரோட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Latest Videos

undefined

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து விழா பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

தோரோட்டம்

இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். கீழமாசி வீதியிலிருந்து புறப்பட்ட தேர் தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வர உள்ளது. காலை 6 மணியளவில் பல்லாயிரக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

click me!