ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குறித்து அவதூறு.. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சேர்ந்த முக்கிய நிர்வாகி கைது.!

Published : Mar 21, 2022, 05:35 AM IST
ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குறித்து அவதூறு.. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சேர்ந்த முக்கிய நிர்வாகி கைது.!

சுருக்கம்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். 

மதுரையில்ட நடந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கை  குழு  உறுப்பினரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஹிஜாப் தீர்ப்பு

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

இந்நிலையில், கடந்த 17ம் தேதியன்று மதுரை மாநகர், தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய ஒருவர், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் வாக்கிங் போய் கொண்டிருந்த நீதிபதி, பயணிகள் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். நாட்டில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று அனைவரும் கதறினார்கள். எல்லா இடத்திலும் உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டதாக நினைக்க வேண்டாம்” என்று கூறிய அவர் அந்த தீர்ப்பை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்று நீதிமன்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசிய ஆடியோவை வெளியிட்டார்.

பாஜக கண்டனம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை, போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்கு தீர்ப்பு கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு. இதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை" என்று பேசியிருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

போலீஸ் கைது

இந்நிலையில்,  ஹிஜாப் விவகாரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்தும், மதத்தின் பெயரில் மக்களிடையே விரோதம், வன்முறை, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், மேலும் நீதித் துறையின் மாண்பையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் பேசியதாகவும், நீதிபதிகளை மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்டத் தலைவர் ஹபிபுல்லா, மதுரை மாவட்ட துணைத் தலைவர் அசன் பாட்ஷா ஆகியோர் மீது மதுரை தல்லாகுளம்போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  இவர்களில் கோவை ரஹமத்துல்லாவை நெல்லை அருகே மேலப்பாளையத்தில் வைத்து மதுரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!