மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழாவின் 2ம் நாள் வீதி உலா நிகழ்வில் பூதம் மற்றும் அன்னம் வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரரை ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல்
undefined
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைப் பெருவிழாவின் 2ம் நாளான நேற்று காலை தங்க சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா சென்ற நிலையில், மாலையில் பூதம் - அன்னம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.
நான்கு மாசி வீதிகளின் இரு புறமும் திரளான மக்கள் திரண்டு மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்துடன் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
சாமி வீதி உலா
இதேபோன்று தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி பட்டாபிஷேகமும், 13ம் தேதி திக் விஜயமும், 14ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி தேரோட்டமும், 16ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.