மணிமாறன் அங்கிருக்கும் கழிவறைக்கு சென்றார். அந்த நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக காரின் சாவி அவரது பையில் இருந்து கழிவறையின் கோப்பைக்குள் தவறி விழுந்தது. அதிர்ச்சியடைந்த மணிமாறன் உடனடியாக அதை எடுக்க முயன்றுள்ளார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் தனது கையை கழிவறையின் கோப்பையில் விட்டு சாவியை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிமாறன்(29). காண்டிராக்டர் பணியாற்றி வருகிறார். வேலை சம்பந்தமாக தனது உறவினர்கள் சிலருடன் ஒரு காரில் மணிமாறன் மதுரை வந்துள்ளார். மதுரை பைபாஸ் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்ப அவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது மணிமாறன் அங்கிருக்கும் கழிவறைக்கு சென்றார். அந்த நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக காரின் சாவி அவரது பையில் இருந்து கழிவறையின் கோப்பைக்குள் தவறி விழுந்தது. அதிர்ச்சியடைந்த மணிமாறன் உடனடியாக அதை எடுக்க முயன்றுள்ளார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் தனது கையை கழிவறையின் கோப்பையில் விட்டு சாவியை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரது கை கழிவறை கோப்பைக்குள் வசமாக சிக்கிக்கொண்டது. மணிமாறனால் கையை வெளியே எடுக்கமுடியவில்லை.
'இவ்வளவு சிறப்புகளா'..? அரசு பள்ளியை பார்த்து அசந்து போன டிரம்ப் மனைவி..!
இதில் பதட்டமடைந்த அவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரண்டு வந்தனர். பலமுறை முயன்றும் மணிமாறனின் கையை மீட்க முடியாமல் போகவே உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுத்தியலால் கோப்பையை உடைத்து மணிமாறனின் கையில் காயம் ஏற்படாதபடி அவரை மீட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக கை கோப்பையில் சிக்கியிருந்ததால் மணிமாறன் சோர்வடைந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் ராஜநடை போட்ட டிரம்ப்..! பிரம்மாண்ட அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு..!