போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!

By Manikandan S R S  |  First Published Feb 18, 2020, 11:40 AM IST

அரசு பணியில் இருப்பதால் தான் மனைவி தன்னை மதிக்காமல் இருப்பதாக கருதிய லாரன்ஸ், அரசு பணியில் சேர்ந்ததன் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என கடந்த 1993 ம் ஆண்டு சான்றிதழ் பெற்ற கமலா, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் பட்டியலின சான்றிதழையும் பெற்றுள்ளார்.


மதுரை மாவட்டம் பரசுராம்பட்டியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி கமலா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியராக கமலா பணியாற்றி வருகிறார். கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமாக அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. இதன்காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும்நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே அரசு பணியில் இருப்பதால் தான் மனைவி தன்னை மதிக்காமல் இருப்பதாக கருதிய லாரன்ஸ், அரசு பணியில் சேர்ந்ததன் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என கடந்த 1993 ம் ஆண்டு சான்றிதழ் பெற்ற கமலா, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் பட்டியலின சான்றிதழையும் பெற்றுள்ளார். இதே போல போலி சான்றிதழ்களை தயாரித்து அவரது மனைவியின் சகோதரியும் அரசு பணியில் சேர்ந்ததாக கமலா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுமற்றுமின்றி மதுரை மாவட்டத்தில் ஏராளமானோர் போலிச்சான்றிதல்கள் மூலம் அரசு பணியில் சேர்ந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் லாரன்ஸ் கூறுகிறார். மேலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகரிகளிடமே புகார் தொடர்பான விசாரணை செல்வதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட இருப்பதாக மதுரை வடக்கு வட்டாச்சியர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மரணத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்..! கோர விபத்தில் வாலிபர்கள் பலி..!

click me!