மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; அன்புசெழியனை பழிவாங்க நடத்திய நாடகம்..!! அம்பலமானது எப்படி.??

By Thiraviaraj RM  |  First Published Feb 12, 2020, 9:26 PM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; அன்புசெழியனை பழிவாங்க நடத்திய நாடகம்..


By:T.Balamurukan

கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் இயங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் வரிசை கட்டி நிற்கிறது. அதில் ஒன்றாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்திற்கான தேர்வு விடைத்தாள் மாயமான விவகாரம் இன்னும் மர்மமாகவே இருக்கும் நிலையில் அதை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது பல்கலைக்கழகம். 

Tap to resize

Latest Videos

மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு உட்பட திண்டுக்கல் கல்லூரி ஒன்றில் இருந்து பல்கலைக்கழக பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட டிகிரி வகுப்பு செமஸ்டர் தேர்வுக்கான 360  விடைத் தாள்கள்  சில நாட்களுக்கு முன்பு மாயமானது. இதன் காரணமாக 2019 நவம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 
இந்நிலையில் காணாமல் போன விடைத்தாள்களை கண்டுபிடித்து மீட்க துணை பதிவாளர் ஒருவர் தலைமையிலான குழு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்குழுவினர் மாயமான விடைத்தாள்களை கண்டறிந்து மீட்டது தான் விசித்திரமாக உள்ளது.

 விடைத்தாள்கள் மாயமானது எப்படி என்பது குறித்து காமராஜர் பல்கலைக்கழக  துணைவேந்தர் எம். கிருஷ்ணன் மற்றும் 5  சிண்டிகேட் உறுப்பினர்கள்  அடங்கிய குழு  தேர்வுத்துறை பொறுப்பில் இருந்த துணைப் பதிவாளர் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்தவர்களிடம் விசாரணை  நடத்தினர்.   மீட்கப்பட்ட விடைத்தாள்கள் திண்டுக்கல் மாவட்டம், ஸ்கர்டு  ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த தேர்வு மையத்தில் எழுதப்பட்ட விடைத்தாள்கள் என்பதும் தெரிய வந்தது. மீட்கப்பட்ட தேர்வு தாள்கள் அனைத்தும் அதே கல்லூரி விடைத்தாள்கள் தானா என, அக்கல்லூரி நிர்வாகத்தினரால் ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விடைத்தாள்களை திருத்த உத்தர விடப்பட்டுள்ளது.   .

 இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் பேசிய போது..,

மீட்கப்பட்ட விடைத்தாள்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து கொண்டு வரப்பட்டது தான் என்பதை உறுதி செய்தோம். இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. பேருந்தில் இருந்து இறக்க தவறவிட்டு, பேருந்திலேயே விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. கண்டறிந்து மீட்கப்பட்ட 360 விடைத் தாள்களை திருத்தும் பணி நடக்கிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கையை பல்கலை. தேர்வுத்துறை மேற் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பிரச்னையில் மிக கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிண்டிக்கேட் உறுப் பினர்கள் பரிந்துரையின் பேரில் 5 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்லூரி பேராசியர்கள்.., " காணாமல் போனதாக சொல்லும் விடைத்தாள் அனைத்தும் எந்த பஸில் காணாமல் போனதோ அதே பஸில் பண்டலாக கிடைத்தது என்று சொல்லுகிறார்கள்.அந்த பஸில் ஒரு நாளைக்கு 40 பேர் பயணம் செய்கிறார்கள்.அப்படி இருக்கும் போது அந்த பண்டல் எப்படி, யாருக்கும் தெரியாமல் இருக்கும்.தேர்வு துறை பதிவாளராக இருக்கும் அன்பு செழியனை பழிவாங்க நடந்திருக்கிறது'. என்கிறார்கள்.
என் அப்பன் குதிரைக்குள் இல்லை என்கிறது போல் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

click me!