மதுரையில் தனியார் வணிக வளாகம் ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
மதுரையில் தனியார் வணிக வளாகம் ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
மதுரை நாராயணபுரம் பகுதியில் பாரதி ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென அனைத்து இடங்களிலும் வேகமாக பரவியது. இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 20 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.