தொற்று நகரமாக மாறும் தூங்கா நகரம்.. 5,000ஐ நெருங்கும் பாதிப்பு.. அச்சத்தில் மதுரை மக்கள்..!

By vinoth kumar  |  First Published Jul 7, 2020, 1:45 PM IST

மதுரையில் இன்று மேலும் 260 கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரையில் இன்று மேலும் 260 கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக தன் படியில் சிக்கவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று கோயில் நகரமான மதுரையையும் ஆக்கிரமித்து வருகிறது. கோவிட்-19  நோயாளிகளின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ள நிலையில், தற்போது கொரோனா குறித்த பதட்டம் இங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது. 

Latest Videos

undefined

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக மதுரையில் வருகிற 12-ம் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை போன்றே, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்ளாகவே தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 260 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,640ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,070 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில் 3,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

click me!