பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதுதான் கொரோனாவிற்கான மருந்தாகும்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதியை அதிகரிக்க மற்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்க அரசு ரூ.75 கோடி ஒதுக்கியிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திலும் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஓராண்டிற்கு பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதுதான் கொரோனாவிற்கான மருந்தாகும்.
undefined
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதியை அதிகரிக்க மற்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்க அரசு ரூ.75 கோடி ஒதுக்கியிருக்கிறது. பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் உள்ளனர். இருந்தாலும் பெரும்பாலான படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், பேசிய அவர் கொரோனா வைரஸ் கண்டறிய, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.5சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இறப்பை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்த 62 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.