மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,552ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,552ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மதுரையில் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையை கொரோனா பாதிப்பு, ஆட்டம் காண செய்து வருகிறது. நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தில் 20வது இடத்தில் இருந்த மதுரை மின்னல் வேகத்தில் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 2,302 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,552ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.