நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..!

By vinoth kumar  |  First Published Jul 5, 2020, 6:49 PM IST

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு மதுரை மத்திய சிறையில் மாற்றம் செய்யப்பட்டதற்கான பரபரப்பு பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. 


சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு மதுரை மத்திய சிறையில் மாற்றம் செய்யப்பட்டதற்கான பரபரப்பு பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆசன வாயிலில் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக வந்து விசாரணைக்கு ஏற்றது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5  பேர் கைது செய்யப்பட்டனர். 

Latest Videos

undefined

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சிறைத்துறையே காரணம் என ஸ்ரீதர் கூறியதால் வார்டன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும், தான் அடைக்கப்பட்டு இருந்த சிறைக் கதவை மூட எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அரசியல் பின்னணியை கூறி ஸ்ரீதர் அதிகாரம் செலுத்தியதால் சிறைக் காவலர்கள் திணறியுள்ளனர். உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஸ்ரீதரை சமாதானப்படுத்தியும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். சிறை பணியாளர்களுக்கு ஸ்ரீதர் கொடுத்த நெருக்கடியால் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

click me!