மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் போலீசாரிடம் சிக்கியதும் கூட்டாளியாக இருந்த செந்திலை சென்னைக்கு வரவழைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் இவரது கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு செல்வம் திடீரென காணாமல் போனார். செந்தில் மாயமானது பற்றி அவரது மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
முருக லட்சுமியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்நிலைத் தேடி வந்தனர். விசாரணையின்போது செந்தில் பயன்படுத்திய செல்போனைக் கைப்பற்றிய போலீசார் அதன் மூலம் அவர் கடைசியாக யாருடன் பேசியுள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர்.
undefined
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!
செந்தில், வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது மற்ற கூட்டாளிகளுடன் தான் கடைசியாக பேசியிருக்கிறார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து இது குறித்து விசாரிக்க அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடர்ந்த போலீசார், மதுரையில் வைத்து வரிச்சியூர் செல்வத்தை புதன்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வரிச்சியூர் செல்வம் செந்தில் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். செந்திலை சென்னைக்கு வரவழைத்து, மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டதாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஹோலி கொண்டாட்டத்துக்குத் தடை! இஸ்லாமிய அடையாளத்தைக் பாதுகாக்க உத்தரவு!
கூட்டாளிகளான வரிச்சியூர் செல்வத்துக்கும் செந்திலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்துவிட்டனர் என்றும் சமரசம் செய்துள்ள திரும்பி வந்த செந்திலை வரிச்சியூர் செல்வம் சென்னையில் வைத்து கொன்றுவிட்டார் என்றும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் மதுரையில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!