விஜய் வசந்த் எம்.பி. குறித்து அவதூறு: மதுரை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார்!

By Manikanda Prabu  |  First Published Jun 21, 2023, 4:27 PM IST

விஜய் வசந்த் எம்.பி., குறித்து தரக்குறைவாக பதிவிட்ட நபர் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்


விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி நடிகர் விஜய் கவுரவப்படுத்தினார்.

அப்போது பேசிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tap to resize

Latest Videos

undefined

அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53ஆவது பிறந்தநாள்  விழாவையொட்டி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அந்த தொகுதியின் எம்.பி,., விஜய் வசந்த் கலந்து 
கொண்டு ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, செய்தியாளார்களை சந்தித்த அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் வசந்த் எம்.பி., எதிர்வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயாராக இருப்பதாகவும், அதனை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விஜய் வசந்த் எம்.பி.,யின் இந்த கருத்து கவலையான விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, தரக்குறைவான பதிவுகள் இடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனை கண்டித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் புகார் அளித்தனர். விஜய் வசந்த் எம்.பி., குறித்து தரக்குறைவாக பதிவிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளர் நல்லமணி தலைமையில், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

இதுகுறித்து வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளர் நல்லமணி கூறுகையில், “விஜய் வசந்த் எம்.பி., குறித்து தரக்குறைவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சுரேஷ் பிஜேபி என்ற முகநூல் பக்கத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக பதிவிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதேபோன்று தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

ஆரம்பத்திலேயே இதனை தட்டிக் கேட்டிருக்க வேண்டும். நாங்கள் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜரை பின்பற்றுகிறோம், எனவே, தரமான பேச்சு என்ன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், தலைவர் எவ்வழியோ அவ்வழியே தொண்டர் என்பது போல் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். பாஜக தொண்டர்கள் அனைவரும் அவர்களது தலைவர்கள் போன்றே தரக்குறைவாக பேசியும், பதிவிட்டும் வருகின்றனர். இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

click me!