Watch Video : சரவணா ஸ்டோர்ஸ் கடையில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

By Raghupati RFirst Published Mar 1, 2023, 7:17 PM IST
Highlights

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 மாடி கட்டிடத்துடன் பிரம்மாண்டமாக சூப்பர் சரவணா ஸ்டோர் கடை திறக்கப்பட்டது. இங்கு வீட்டுக்கு தேவையான பொருள்கள், உடைகள் என அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. இதில் தினந்தோறும் தங்க நகை முதல் மளிகை பொருட்கள் வரை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

Latest Videos

இன்று மாலை சுமார் 3 மணி அளவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒன்பதாவது தளத்தில் இயங்கி வரும் சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது என்று கூறப்படுகிறது. பிறகு இதனை அடுத்து கடையில் இருந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

இந்த தீ விபத்து குறித்த தகவல் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸ் மாடியில் தீ விபத்து 🥲 pic.twitter.com/8WKchi8h9x

— Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726)

இந்த தீ விபத்தால் மயக்கமடைந்த ஊழியர்களும மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகரும் உதவி மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

click me!