அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி.. மதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்..!

Published : Feb 28, 2023, 07:49 AM ISTUpdated : Feb 28, 2023, 08:30 AM IST
அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி.. மதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்..!

சுருக்கம்

மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை வளர் நகர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளி என வினோத் என்பது தெரியவந்தது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்த ரவுடி வினோத் மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இதனை அறிந்த சிறப்பு படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பிக்க முயன்ற அவர் பயங்கர ஆயுதத்தால் காவலர்களை தாக்கம் உட்பட்ட போது காவலர்கள் தற்காப்புக்காக ரவுடி வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். 

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனே மீட்டு மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத் மீது அடிதடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு திருச்சி மற்றும் சென்னையில் போலீசாரை தாக்கிய ரவுடிகளை சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!