மதுரையில் மகன், தந்தை அடுத்தடுத்து தற்கொலை; சோகத்தில் உறவினர்கள்

Published : Feb 24, 2023, 06:09 AM IST
மதுரையில் மகன், தந்தை அடுத்தடுத்து தற்கொலை; சோகத்தில் உறவினர்கள்

சுருக்கம்

மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவரான மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், காவலரான தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலவளவியில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அழகன். மேலூர் காந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மகள்களுக்கு திருமணம் செய்துவைத்துவிட்ட நிலையில், மகன் தமிழ்வாணன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தமிழ்வாணன் வீட்டில் இருந்தபோது அவரது அம்மாவும், அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட தமிழ்வாணன் தனது அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது தமிழ்வாணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்வாணன் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் உயிரிழந்த செய்தி அறிந்த தந்தை அழகன் கழிவறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ரயில் நிலைய வடமாநில ஊழியர்களின் பொறுப்பற்ற பேச்சால் விழி பிதுங்கும் பயணிகள்

இது தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறையினர் அழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரது தற்கொலைக்கும் குடும்ப பிரச்சினை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!