ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி எதிர் சாலையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் அப்பளம் போல் நொறுங்கி அரசு மருத்துவர் உடல் நசுங்கி பலியானார்.
ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி எதிர் சாலையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார் அப்பளம் போல் நொறுங்கி அரசு மருத்துவர் உடல் நசுங்கி பலியானார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவரது தந்தை மற்றும் மனைவி ப்ரீத்தி இவரும் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். கார்த்திகேயனுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தமது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கார்த்திகேயன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் தனது காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். மதுரை மாவட்டம் கப்பலூர் மதுரை சுற்றுச் சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து கார்த்திகேயனின் காரின் பக்கவாட்டில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
undefined
காரை உரசிவிட்டு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மருத்துவர் கார்த்திகேயன், அரசு பேருந்தை துரத்திச் சென்றார். அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்றபோது, பரம்புப்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் பேருந்தை முந்த முயன்றபோது சாலை வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டிச் சென்றது. அப்போது எதிர் திசையில் மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மருத்துவர் கார்த்திகேயன் சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. பேருந்து மீது மோதிய கார் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அப்பளம் பொல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் மருத்துவர் கார்த்திகேயன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
A speeding car which allegedly tried to overtake a government bus plunges into another oncoming bus in the opposite lane in Madurai. Karthikeyan, a doctor who was driving the car was killed on spot. pic.twitter.com/qtNpWVuFnt
— Mugilan Chandrakumar (@Mugilan__C)
விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் லட்சுமி லதா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மருத்துவர் கார்த்திகேயன் சடலத்தை மீட்டனர். இதையடுத்து கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை உரசிச் சென்ற அரசு பேருந்து விரட்டிச் சென்று விபத்தில் சிக்கி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.