மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடாதவர்கள் வரும் 13ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதி கிடையாது. மேலும், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸான ஒமிக்ரான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. எனவே 3ம் அலையை பரவாமல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்காணிக்க பல்வேறு துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைத்தும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடாதவர்கள் வரும் 13ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதி கிடையாது. மேலும், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில் நிர்வாக காரணங்களுக்காக 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார். நாளை முதல் வழக்கம் போல், தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.