மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை மறுநாள் முதல் 2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தமிழகத்திலேயே மதுரை மிகவும் பின்தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனன் தெரிவித்திருந்தார்.
undefined
இதையும் படிங்க;- திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொள்ளை… வெளியான சிசிடிவி காட்சி… பக்தர்களிடம் உதவி கேட்ட போலீஸ்!!
இதனையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்காணிக்க பல்வேறு துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைத்தும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- Youtuber Maridhas: வாண்டடா வந்து சிக்கி சிறையில் கம்பி எண்ணும் மாரிதாஸ்.. வச்சு செய்ய தயாராகும் திமுக..!
இதையும் படிங்க;- TTV Dhinakaran: ஆஹா மீண்டும் முதல்ல இருந்தா.. ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள்.. டிடிவி.!
இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடாதவர்கள் வரும் 13ம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்காது என்று அதன் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். மேலும், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் அல்லது செல்போனில் பதவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.