மதுரையில் சத்தமில்லாமல் ரூ.4 கோடி நிலத்தை அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்; பள்ளி நிர்வாகத்தினர் நெகிழ்ச்சி

By Velmurugan sFirst Published Jan 10, 2024, 6:40 PM IST
Highlights

மதுரை மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலத்தை பெண் ஒருவர் அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய நிகழ்வு பள்ளி நிர்வாகிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த கிழக்கு கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டியன் மனைவி பூரணம். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1.52 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளி ஒன்றுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன மதிப்பு ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது.

கோவையில் இரவு நேரத்தில் பூட்டிய வீடுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தும் யானைகள் - உயிர் பயத்தில் மக்கள்

தனது மகள் ஜனனியின் நினைவாக கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் நோக்கில் அவரது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை முறையாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்தர் இந்துராணி முன்னிலையில் ஒப்படைத்தனர்.

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளுக்கு சுங்கக்கட்டணமா? அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் இதனை பெரிது படுத்தவோ, விளம்பரப்படுத்தவோ தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அரசுப் பள்ளி சார்பில் பூரணத்திற்கு வருகின்ற வெள்ளிக் கிழமை பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

click me!