நேரில் வந்த கருணாநிதி.. நெகிழ்ந்த மு.க ஸ்டாலின் - கண்கலங்கிய திமுக உடன்பிறப்புகள்

By Raghupati RFirst Published Jul 15, 2023, 7:37 PM IST
Highlights

சுமார் 3 லட்சம் புத்தகங்களுடன் கூடிய கலைஞர் நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரையில் சிறப்புமிக்க நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் சார்பில் மதுரை புது நத்தம் சாலையில் 2.7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது.

கலைக்கூடம், குழந்தைகள் நூலகம், போட்டி தேர்வுக்கான பயிற்சி கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக்கூடம், சிறார் திரை அரங்கம், சிறார் அறிவியல் கூடம் , மாநாட்டு அரங்கம் என பல வகை வசதிகளுடன் 7 தளங்களை கொண்டதாக இந்த நூலகம் அமைந்துள்ளது. சுமார் 3 லட்சம் புத்தகங்களுடன் கூடிய கலைஞர் நூலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!

நூலகத்தின் முன்புறம் அமைந்துள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்த முதல்வர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் நூலகத்தினை திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலைஞர் கருணாநிதி அருகில் அமர்ந்து பேசுவது போல திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தத் திரை அருகே கருணாநிதியுடன்  முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகிய இருவரும்  உற்சாகம் ததும்ப பேசி நெகிழ்ந்தனர். இதனை அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர். நூலக கட்டுமான பணிகள் தொடர்புடைய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

மேலும் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட கட்டுமானப் பணியாளர்கள் சார்பில், தலைமைக் கொத்தனார் அன்புச் செல்வம் மற்றும் கொத்தனார் உதவியாளர் ராக்கு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?

click me!