முதல்வர் ஸ்டாலின் மதுரை விசிட் - மதுரையில் அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் - முழு விபரம்

By Raghupati R  |  First Published Jul 14, 2023, 11:45 PM IST

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மதுரைக்கு வருகை தருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மதுரையில் நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ள இருப்பதால் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “15. 07.23ம் தேதியன்று மதுரை மாநகர், புதுநத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு நகரில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகள் ஆகியவற்றின் கோக்குவரத்து கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

விழா நடைபெறும் நத்தம் சாலையில் - IOC ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இவ்வாகனங்கள் ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்றுமாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லாம். 

காலை 09. 00 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 09. 00 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்லவேண்டும். 

அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாமநத்தம், பொட்டபாளையம் மற்றும் கீழடி வழியாக இராமேஸ்வரம் சாலையினை மாட்டுத்தாவணி செல்லவேண்டும். அடைந்து விரகனூர் சந்திப்பு வழியாக தூத்துக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்” என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது 140 கோடி மக்களின் கவுரவம்.. இந்தியா - பிரான்ஸ் உறவை பற்றி பிரதமர் மோடி பேசியது என்ன?

click me!