அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி விருதுகள்? உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Jan 2, 2023, 12:50 PM IST
Highlights

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை.

2019-20ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை.

சென்னையில் 2019-2020ம் ஆண்டுக்கான கலைமாமமணி விருது 20.2.2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத நபர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக கடந்த ஆட்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் ஏதேனும் முறைகேடு உள்ளதா என்பது குறித்து தற்போது கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது 2019-20ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 

 

click me!