பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றாலும் மிகவும் விசேஷம் என்றால் அது மதுரை மாநகரில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றாலும் மிகவும் விசேஷம் என்றால் அது மதுரை மாநகரில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
காணும் பொங்கலை முன்னிட்டு வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த போட்டியில், 739 ஜல்லிக்கட்டு காளைகளும், 695 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
இந்த போட்டியில், பரிசுகளை அள்ளிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் விவரம் இதோ..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குலமங்கலம் மாரநாடு "கறுப்பன்' என்கிற காளை முதல் பரிசை வென்றது. அவனியாபுரத்தை சேர்ந்த 'ராவணன்' என்கிற காளை 2ஆம் இடம் பிடித்தது.
இதை தொடர்ந்து சிறந்த மாடுபிடி வீரருக்கான, பரிசுகள் முதல்வர் துணை முதல்வர் சார்பில் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரஞ்சித் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 7 லட்சம் மதிப்புள்ள நான்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன.தற்போது முதலிடம் பிடித்த ரஞ்சித்தின் சகோதரர் ராம்குமார், கடந்த ஆண்டு முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்த வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை தழுவியது கணேசனுக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக 7ஆயிரம் ருபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.