உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையின்றி கடந்த 20 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்துவதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று ஜல்லிக்கட்டு போட்டு கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையின்றி கடந்த 20 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.போப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு சரியாக நடந்து கொண்டிருக்கிறது. சரியாக நடந்து கொண்டிருக்கும் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை, எனக்கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுக உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.