பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றாலும் மிகவும் விசேஷம் என்றால் அது மதுரை மாநகரில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்றாலும் மிகவும் விசேஷம் என்றால் அது மதுரை மாநகரில், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
காணும் பொங்கலை முன்னிட்டு வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த போட்டியில், 739 ஜல்லிக்கட்டு காளைகளும், 695 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடியபோது, மாடி பிடி வீரர் ஒருவர், காளை முட்டியதில்... பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு வீரர் மயங்கி விழுந்து இறந்தார்.
அதே போல் மாடுகள் பிடித்த போது 30 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.