கூட்டத்துல பாதில எந்திருச்ச? இரத்தம் கக்கி சாவ; பெண்களை மிரட்டி உட்காரவைத்த செல்லூர் ராஜூ - கூட்டத்தில் சலசலப்

By Velmurugan s  |  First Published Mar 27, 2024, 4:31 PM IST

மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நான் பேசும் போது யாராவது பாதியில் எதிரிருச்சி போனா ரத்தம் கக்கி செத்துருவீங்கனு கூறியது சலசலப்பை ஏற்படுதியது.


பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக்கூட்டம், பரப்புரை என அரசியல் கட்சி பிரமுகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் கூட்டம் செல்லூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார்.

வேட்பாளருக்காக உறுதிமொழி எடுத்த ஆட்சியர்; வழிமொழிந்த சுயேட்சை - நாகையில் சுவாரசியம்

Tap to resize

Latest Videos

undefined

முன்னதாக அவர் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், மேடைக்கு முன்னர் கூடியிருந்த பெண்கள், நிர்வாகிகளிடம் உரிமையாக, யாருக்காவது வெளியில் செல்ல வேண்டும், உட்கார முடியவில்லை என்றால் நான் பேசத் தொடங்கும் முன்பே சென்று விடுங்கள். நான் பேசிக் கொண்டிருக்கும் போது யரேனும் பாதியில் சென்றால் அவர்கள் வீட்டிற்கு செல்லும் முன் ரத்தம் கக்கி சாவீர்கள் என உரிமையோடு தொண்டர்களை மிரட்டினார்.

ராதிகாவுக்கு மட்டுமல்ல, விருதுநகரில் ஒவ்வொரு தாய்க்கும் நான் மகன் தான்; கேப்பில் ஸ்கோர் செய்யும் விஜயபிரபாகரன்

இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் அமைதியானதும் செல்லூர் ராஜூ பேசத் தொடங்கினார். மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன், திமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.பி. சு.வெங்கடேசன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன் என முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

click me!