பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அதிமுக தொண்டர்கள் கிளர்ச்சியுடன் உள்ளனர் - செல்லூர் ராஜூ

By Velmurugan s  |  First Published Mar 18, 2024, 5:00 PM IST

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அதிமுக கிளர்ந்து எழுந்துள்ளது, இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தளமாக விளங்குகிறது என மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.


அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் என்ற செல்வம், அதிமுக மாநில மருத்துவர் அணி இணை செயளாலர் டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் "அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள், தலைவர்கள் வழியிலேயே தொண்டர்கள் செயல்படுகிறார்கள். மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் இட வேண்டும் என எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல அதிமுகவினர் செயல்படுகிறார்கள். அதிமுக மாநாட்டில் புளியோதரை சாப்பிட்டு விட்டு அதிமுக தொண்டன் எழுச்சியாக பங்கேற்றார்கள். 

தமிழகத்தில் வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் பிரதமருக்கு இல்லை - டிடிவி தினகரன்

திமுக மாநாட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு திமுக தொண்டன் சீட்டு விளையாடினார்கள். மத்திய - மாநில அரசின் தவறான நடவடிக்கையால் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தளமாக விளங்குகிறது. மக்கள் தலைவராக விளங்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமியை ஈனப்பிறவி அண்ணாமலை தவறாக விமர்சனம் செய்கிறார். 

5 ஆண்டுகளில் கடைசி 6 மாதங்களில் மட்டுமே சு.வெங்கடேசன் மக்கள் மத்தியில் வலம் வருகிறார். இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு அடிமையாக செயல்படுகிறது. மக்களுக்கு உண்மையாக செயல்படக்கூடிய தொண்டர்கள் அல்லாத கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய மார்க்கிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மதுபானம் அல்லாத மாநிலமாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது போதைப்பொருள் மாநிலமாக விளங்குகிறது என கனிமொழியிடம் மக்கள் கேட்க வேண்டும். 

ஆவின் பாலில் நீச்சல் அடித்த புழுக்கள்; நீலகிரி தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அதிமுக கிளர்ந்து எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே உலகத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள். அதிமுக கோட்டை மதுரை என்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்வோம்" என பேசினார்.

click me!