மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றிரவு முதல் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றிரவு முதல் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் செல்லூர் பகுதிகளில் உள்ள குளங்களில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. யானைக்கல் பகுதியிலுள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றில் பல பகுதிகளில் 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி நிற்கிறது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நுரையை கலைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதியில் அதிகளவு சாக்கடை நீர் கலப்பதால் நுரை பொங்கியதா அல்லது ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கலந்ததால் நுரை பொங்கியதா என அப்பகுதி மக்களுக்கு சந்தேகக்கின்றனர். தொழிற்சாலைகள் அதிகளவு தண்ணீர் செல்வதை பயன்படுத்தி கழிவுநீரை கலந்து விட்டதா என மாநகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.