தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்: தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மேலும், தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும்; பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும். வட கிழக்கு பருவமழையின் மூன்றாவது சுற்றாக மீண்டும் வரும் 12-ம் தேதி முதல் கனமழை பெய்ய தொடங்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டி.ஜி.பி. அலுவலகம்-10 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ., செங்குன்றம் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.