மதுரையில் அதிர்ச்சி... திருமணமான 3 மாதங்களில் பெண் மருத்துவர் உயிரிழப்பு..!

Published : Mar 13, 2021, 03:41 PM IST
மதுரையில் அதிர்ச்சி... திருமணமான 3 மாதங்களில் பெண் மருத்துவர் உயிரிழப்பு..!

சுருக்கம்

மதுரையில் திருமணமான 3 மாதத்தில் பெண் மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் திருமணமான 3 மாதத்தில் பெண் மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மருத்துவர் அசோக் விக்னேஷ். மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் மருத்துவர் ஹரிணி (26). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ஹரிணிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு வீட்டில் வைத்து முதலில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு வலி நிவாரணி ஊசி போடப்பட்டதும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து கோமா நிலைக்கு சென்றதால் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதங்களில் இறந்ததால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Madurai Meenakshi Temple: தேவாரப் பாடல்கள் முழங்க... 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!