உசிலம்பட்டியில் 7 நாள் பெண் குழந்தைக்கு செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்டது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உசிலம்பட்டியில் 7 நாள் பெண் குழந்தைக்கு செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்டது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 5 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி 3வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனாலும், குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனை அறிக்கையில் குழந்தை செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுதிணறலால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெண் சிசு கொலையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.