TTR: மதுரையில் விரைவு ரயிலில் ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கேட்டு வசமாக மாட்டிய போலி TTR

By Velmurugan sFirst Published Jun 18, 2024, 8:23 PM IST
Highlights

அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் வேடமணிந்து டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட இளைஞரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தியோதயா விரைவு ரயில் தினசரி தாம்பரத்தில் இருந்து நாகர்கோயில் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11:00 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 6:10 மணியளவில் திருச்சியை அடைந்தது. அங்கு ரயிலில்  டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து உள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவணசெல்வி என்பவரும் பயணம் செய்தார். 

Latest Videos

அவர் இந்த டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட  நபரிடம் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்ட பொழுது மதுரையில் பணிபுரிவதாக கூறியிருக்கிறார். நானும் மதுரையில் தான் பணிபுரிகிறேன் உங்களை பார்த்ததில்லை என்று அவரது அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பதை கண்டறிந்தார். 

அவங்க பண்றாங்களோ இல்லையோ, நீ நல்லா பண்றியேமா; சசிகலா பேட்டியில் கவனம் ஈர்த்த பெண்

இதனனையடுத்து ரயில் மதுரையை அடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் போலி டிடி.ஆரை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது அந்த போலி டி.டி.ஆர் கேரளா மாநிலம் பாலக்காடு  பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார் என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

click me!