மகளுடன் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர்..! மதுரையில் பரபரப்பு..!

By Manikandan S R S  |  First Published Dec 12, 2019, 1:31 PM IST

மதுரை அருகே ரயிலில் இருந்து தந்தை-மகள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கும் கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(75). இவருடைய மகள் உதயராணி(55). முதியவரான மாணிக்கம் மகள் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். திருப்பூரில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டிற்கு தனது மகளுடன் மாணிக்கம் சென்றுள்ளார். பின்னர் கள்ளக்குடிக்கு திரும்புவதற்காக ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயிலில் வந்து கொண்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

மதுரையை கடந்து திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு மாணிக்கம் வந்த பயணிகள் ரயில் வந்தது. ரயிலில் இருந்து பயணிகள் இறங்கத் தொடங்கினர். மாணிக்கமும் தனது மகளுடன் இறங்கியுள்ளார். முதலில் உதயராணி இறங்கியுள்ளார். மகளின் கையை பிடித்து மாணிக்கம் இறங்கி கொண்டிருந்தபோது ரயில் கிளம்பியுள்ளது. இதனால் மகளுடன் சேர்ந்து மாணிக்கம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக உதயராணி தண்டவாளத்தில் விழுந்தார். அதிர்ச்சியடைந்த மாணிக்கம் கூச்சல்போடவே ரயிலில் இருந்தவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதன்காரணமாக லேசான காயங்களுடன் உதய ராணி உயிர் தப்பினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆசுவாச படுத்தினர். விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் மாணிக்கத்தையும் அவரது மகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் திருமங்கலம் ரயில்நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!