வரதட்சணை கேட்டு சித்ரவதை.. கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்.. வலியால் அலறி துடிப்பு.!

By vinoth kumar  |  First Published Aug 16, 2021, 2:09 PM IST

கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார் அடுப்பில் இருந்த சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.


மதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு காதல் மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றி கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டு அருகே உள்ள அய்யனகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அருண்குமார், ஜெயபிரதா ஆகியோர் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணையாக பணம், நகை கேட்டு மனைவியுடன் அருண்குமார் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார் அடுப்பில் இருந்த சூடான கொதிக்கும் பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். ஜெயபிரதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து,  வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!