#BREAKING சுவாசக் கோளாறு.. மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமியின் உடல்நிலை கவலைக்கிடம்..!

By vinoth kumar  |  First Published Aug 12, 2021, 1:26 PM IST

சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று இதற்கு முன்பும், பலமுறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அருணகிரி சுவாமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!