மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Published : Aug 13, 2021, 09:40 PM IST
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

சுருக்கம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.  

தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சந்நிதானமாக இருந்துவந்தார் அருணகிரிநாதர். 

இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோவில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இந்த ஆதீனத்தின் 292-வது குருமகா சந்நிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் காலமானார். அவருக்கு வயது 77.
 

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!