காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை... விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்..!

By vinoth kumarFirst Published May 21, 2019, 3:05 PM IST
Highlights

மதுரையைச் சேர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மதுரையைச் சேர்ந்த பட்டு மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரவுப் பகுப்பாய்வு பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ, மாணவியரையும் அவர் வழிநடத்தி வந்தார். 

பட்டு மீனாட்சி ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் வந்து சேர்ந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நாகமலை என்.ஜி.ஜி.ஓ காலனியின் வசித்து வந்த இவர்களின் வீடு கடந்த சில நாட்களாக வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மாணவி பட்டு மீனாட்சி தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

தம்பதியினரின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. பெரிய அளவில் பணத்தை இழந்த தம்பதியினர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை ஆகையால் தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!