10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேனி மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேனி மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு சிறுமி வீட்டுக்கு வந்தாள். பின்னர் புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு பெரியம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றாள்.
undefined
பெரியம்மா வீட்டுக்கு சென்றவள் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து அவளை தேடி வந்தனர். இந்நிலையில், அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சிறுமி பிணமாக கிடந்தாள். இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு அக்டோபரில் சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
கீழ் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கில் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் அரசு தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பல முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, முக்கிய சாட்சிகள் பலர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.