மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? தினகரன் நாளிதழ் 2007-ம் ஆண்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதனையடுத்து மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி தரப்பிலும் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் போதிய ஆர்வம் காட்டாத நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ தனி வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, இறுதி விசாரணை மார்ச் 4-ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் பூட்டிய நீதிமன்ற அறைக்குள் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அைனத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் அட்டாக் பாண்டி உள்பட 7 பேரை விடுதலை செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.