எல்லாம் கையை மீறி போச்சு... சென்னையால் தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா..!

By vinoth kumar  |  First Published Jun 26, 2020, 4:08 PM IST

சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.


சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 71 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 9000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக தொடர்ந்து சென்னை மட்டுமே அதிக பாதிப்பை பதிவு செய்து வந்தாலும், மற்ற சில மாவட்டங்களில் சமீப நாட்களாக அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.

Tap to resize

Latest Videos

அதிலும் குறிப்பாக தேனி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை பதிவான பாதிப்பு எண்ணிக்கையை விட 40 சதவீதத்திற்கும் மேல் கடந்த 3 நாட்களில் மட்டும் பதிவாகியுள்ளது.தேனியில் கடந்த 22ம் தேதி 236 ஆக இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை மூன்று நாட்களில் 85% அதிகரித்து 437 ஆக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு மிக குறைவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று நீலகிரி. ஆனால் அந்த மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த் பாதிப்பை விட மூன்று நாட்களில் 61% அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 22ம் தேதி 37 பாதிக்கப்பட்டிருந்தனர். 25ம் தேதி 50 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவானது இதுவரை மதுரையில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதியளவாகும். மதுரையில் மொத்தம் 1,449 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதே போன்று ராமநாதபுரத்தில் 157 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது 49.5% அதிகரிப்பாகும். தருமரபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 46.87 சதவீதம் அளவிற்கு அதிகரித்து தற்போது 47 பேர் என்ற பாதிப்பு நிலையில் இருக்கிறது. இதுவே இப்போதைய சூழலில் தமிழகத்தில் மிக குறைவான பாதிப்புடைய மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!