மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரையில் திருப்பாலையில் காயத்ரி நகர் உள்ளது. இங்கு சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காயத்ரி நகரில் வசிக்கும் 54 வயது ஆணுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து, வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 4 குழந்தைகளும் அடங்கும்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.7 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பதால் அந்த தெருவை மூடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.