மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் அனுப்பான்டி சுகாதார நிலையத்தில் மருத்துவரான சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார். 8 கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்குக் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நுரையீரலில் 90 சதவிகிதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கொரோனாவுக்கு தாயும், அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.