மதுரையில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 40 போலீசாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 40 போலீசாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் கொரோனா வைரஸ் நோயால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், திடீர்நகர் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் ஏட்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியில் பணிபுரிந்ததால் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டுகிறது.
undefined
இதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகரில் பணியாற்றும் அனைத்து காவல் அதிகாரிகள், காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அதிரடி உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக கொரானா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பணிபுரிந்த 567 போலீசார் அடையாளம் காணப்பட்டு அதில் 200 பேருக்கு திடீர்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 40 போலீசாருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மீதமுள்ள 367 போலீசாருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.