திருமண மேடையில் தனது வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளையை அறிமுகப்படுத்திய மணப்பெண்

By Velmurugan s  |  First Published May 23, 2023, 7:03 PM IST

மதுரையில் திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை திருமண மேடையில் உறவினர்களுக்கு அறிமுகபடுத்திய மணப்பெண்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த  சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நாகமலைப்புதுக் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் தனது உறவினர்களுக்கும் ஜல்லிகட்டு காளையை அறிமுகம் செய்து வைத்தனர் மணமக்கள். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரியில் கோவில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை; அதிகாரிகள் விசாரணை

அண்மை காலமாக இளைஞர்கள் பலரும் தங்களது பாராம்பரியத்தை காக்கும் பொருட்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மணப்பெண் மணமேடையில் தனது வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளையை அறிமுகம் செய்த நிகழ்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

click me!