மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் மீது 23 மாணவிகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து துணை பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறையின் துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறையில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் பெற்றப்பட்டது. இதனை அடுத்து விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு கமிட்டியில் 23 மாணவிகள் எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் துணை பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து அவரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உத்தரவு வழங்கியது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு பேசும் பொழுது, கடந்த 6ம் தேதி மயக்கவியல் துறையில் பயிலும் மாணவிகளிடம் இருந்து துணை பேராசிரியர் செய்யது தாஹீர் உசைன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டு மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் 18 மாணவிகள், ஒரு செவிலியர், 2 பேராசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்டது.
undefined
சாலையில் திடீரென மிரண்ட மாடு; ரேக்ளா வண்டி மோதி தூக்கி வீசப்பட்ட மனைவி சம்பவ பலி
இதனை அடுத்து மாணவிகளிடம் துணை பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதல் முறை. இது போன்ற புகார்கள் மீது உடனடியாக மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.