கண்டிக்காமல் திரும்பி வந்தால் கருப்புச் சட்டை போராட்டம்! மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

By SG Balan  |  First Published Jul 16, 2023, 9:53 PM IST

தமிழருவி மணியன் கட்சியின் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்று கர்நாட அரசைக் கண்டிக்காமல் வந்தால் கருப்புச் சட்டை போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்லி இருக்கிறார்.


பெங்களூரு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காத கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால், அவர் தமிழ்நாடு திரும்பும்போது பாஜக சார்பில் கருப்பு சட்டை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சியின் செய்யப்பட்ட சாதனை விளக்க மலர் வெளியீட்டு விழா மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Latest Videos

undefined

விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆ. ராசாவுக்குக் கேவலமாகத்தான் தெரியும்: அண்ணாமலை பதிலடி

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "காமராஜர் தமிழக அரசியலில் மனசாட்சியக இருப்பவர். எதிர்க்கட்சிகளின் முரண் இல்லாத கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தனி மனிதராக ஒரு கூட்டணி சேரும் போது அது மூன்று மாதங்களுக்கு மேல் நிற்காது." என்றார்.

திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு வழங்கிய சுதா - நாராயணமூர்த்தி தம்பதி

தொடர்ந்து பேசிய அவர், "உங்களின் நோக்கம் ஜூலை 18ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்திய கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கப் போகிறார்கள். வருகிற 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து ராஜில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பதினெட்டாம் தேதி முதல்வர் கண்டனக் குரலை பதிவு செய்யாமல் வந்தால் நாங்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை காட்டுவோம்." என்றார்.

தமிழருவி மணியன் பேசும்போது, "தமிழ் மாநில காங்கிரஸ், காமராஜர் மக்கள் கட்சி, பாஜக உடனான கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம்பெற வேண்டும்" என வலியுறுத்தினார். ஜி.கே.வாசன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை என்பது கண்ணீர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. பயிர் பிரச்சனை உயிர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆட்சியாளர்களிடம் இந்த கோரிக்கையை வைத்துவிட்டு திரும்ப வேண்டும்" என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரண உதவி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

click me!