திமுக அரசுக்கு வாய் மட்டும் தான்; செயலில் ஒன்றும் இல்லை - செல்லூர் ராஜூ விமர்சனம்

Published : Dec 04, 2023, 08:07 PM IST
திமுக அரசுக்கு வாய் மட்டும் தான்; செயலில் ஒன்றும் இல்லை - செல்லூர் ராஜூ விமர்சனம்

சுருக்கம்

சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் திமுக அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புத்தாடைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர், “சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4 கோடி ரூபாயில் கூட மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது. 

திமுக தலைமையிலான அரசு பேச்சோடு சரி. எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யவில்லை. திமுக அரசு புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. திமுக தலைமையிலான தமிழக அரசு திறனற்ற அரசாக உள்ளது. திமுக உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள். அதே நேரத்தில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 

புயல் கோர தாண்டவத்தின் இடையே பிரசவ வலி; பெண் கூலி தொழிலாளியை விரைந்து மீட்ட சென்னை போலீஸ்க்கு குவியும் பாராட்டு

நடிகர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டுமென அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன். சினிமாவில் எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள். சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கரை படியா கரத்திற்கு சொந்தக்காரர் ஆவார்" என கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!