இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்திய போது சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அந்த நபரின் வாகனத்தை சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக ரூ20 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிறகு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை திண்டுக்கலில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..