Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை; 65 சவரன் நகைக்காக உயிரை கொன்ற கொள்ளையர்கள்

By Velmurugan s  |  First Published Jul 9, 2024, 5:31 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்றுவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளயர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக்குளம் மாயோன் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரது மனைவி காசம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகன்கள் பாண்டியராஜன், பரசுராமன் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மகள் பாண்டியம்மாள் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ராஜம்பாடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியம்மாள் தந்தை தங்கராசு விபத்து ஒன்றில் காயமடைந்து மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இதனால் காசம்மாள் மட்டும் வாகைக்குளம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காசம்மாள் கணவர் தங்கராசுடன் பேசி உள்ளார். அவர்கள் பேசும்போது மனைவி காசம்மாளை தனியாக ஏன் வசிக்கிறாய் மகள் வீட்டிற்கு வா என தங்கராசு அழைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு காசம்மாள் வீட்டுக் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதியினர் காசம்மாளை அழைத்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

சர்வாதிகாரத்தோடு, தெனாவெட்டாக அவர மாதிரி நான் பேசமாட்டேன்; ஈபிஎஸ் குறித்த கேள்விக்கு பழனிசாமி பதில்

ஆனால், எந்த சத்தமும் வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் காசம்மாள் இறந்து கிட.ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிந்துபட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காசம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். 

மேலும் வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் கணவர் தங்கராசுக்கு போலீசார் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து தனது மகளுடன் வந்த தங்கராசு காசம்மாள் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். பின் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட காசம்மாள் கழுத்தில் 15 சவரன் நகை அணிந்து இருந்ததாகவும், மேலும் பீரோவில் 50 சவரன் நகை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

படிக்கட்டில் பயணம்; பாதியில் இறங்கச் சொன்னதால் கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கிய இளைஞர்

இதையடுத்து காசம்மாளை கொலை செய்த மர்ம நபர்கள் 65 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சார்லி வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி அரவிந்திற்கு தகவல் கொடுத்தனர். 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி அரவிந்த் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்து பட்டி போலீசார் இறந்த காசம்மாளின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு 65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!